News December 24, 2025
வேலூர் மக்களுக்கு காவல்துறை அறிவுறுத்தல்!

வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் சாலை பாதுகாப்பு குறித்த முக்கிய விழிப்புணர்வு செய்தி இன்று (டிச.24) வெளியிடப்பட்டுள்ளது. பொறுமை மிக அவசியம், வாகனங்களை ஓட்டும்போது அவசரத்தைத் தவிர்த்து, மிகுந்த பொறுமையுடன் செயல்பட வேண்டும். ஒரு நொடி கவனக்குறைவோ அல்லது தேவையற்ற அவசரமோ வாழ்நாள் முழுவதையும் பாதிக்கும் என்று மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News December 30, 2025
வேலூர்: பிளஸ்-2 மாணவி தற்கொலை!

வேலூர் அடுத்த விரிஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தி. இவரது மகள் பிரியாமணி. அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். பிரியாமணி அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருந்தாக தெரிகிறது. இதை ஜெயந்தி கண்டித்ததால் மனவேதனை அடைந்த மாணவி நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 30, 2025
வேலூர் மகளிர் போலீசாருக்கு 9 லட்சம் அபராதம்

போக்சோ வழக்கில் சரியாக விசாரணை நடத்தாத வேலூர் மகளிர் மற்றும் தெற்கு காவல் நிலைய போலீசாருக்கு மாநில மனித உரிமை ஆணையம் 9 லட்சம் அபராதம் விதித்து இன்று (டிச.30) உத்தரவிட்டது. அதன்படி வேலூர் மகளிர் இன்ஸ்பெக்டர்கள் ஷாகின், வாசுகி, உதவி ஆய்வாளர் சத்தியவாணி, தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாமளா ஆகியோர் தலா 2 லட்சம், மகளிர் போலீசார் தமயந்தி, ஜெயசுதா ஆகியோரிடம் தலா 50 ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளது.
News December 30, 2025
வேலூர்: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

இ-சேவை மையம் தொடங்க விருப்பமா? அதற்கு முதலில், www.tnesevai.tn.gov.in, என்ற தமிழக அரசின் இ-சேவை இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். புகைப்படம், கல்வி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை சமர்பித்து விண்ணப்பிக்கவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.


