News November 19, 2025

வேலூர்: மகனை நினைத்து கவலை; உயிரை மாய்துகொண்ட தந்தை!

image

வேலூர் மாவட்டம், மூத்தக்கல் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (65), இவர் தன்னுடைய மன வளர்ச்சி குன்றிய மகனுக்கு திருமணமாகவில்லை என்ற மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் சில நாட்கள் முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார். அதை கண்ட அக்கப் பக்கத்தினர் அவர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் (நவ18) உயிரிழந்தார் தகவல் அறிந்த தாலுகா போலீசார் வழக்கு போலீஸ் செய்தனர்.

Similar News

News November 21, 2025

வேலூர்: 10th முடித்தால் உளவுத்துறையில் வேலை ரெடி!

image

வேலூர் மக்களே, மத்திய உளவுத் துறையில் காலியாக உள்ள 362 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 – 25 வயதிற்குட்ப்பட்டவர்கள் நவ. 22ம் தேதி முதல் டிச. 14க்குள் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். ரூ.18,000 – ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு<> CLICK<<>> செய்யவும். இந்த பயனுள்ள தகவலை ஷேர் செய்யுங்க

News November 21, 2025

வேலூர்: பணம் கேட்டு மிரட்டிய முன்னாள் காதலி!

image

வேலூர்: சலவன்பேட்டையைச் சேர்ந்த இசைக்கலைஞர் (38), 2008ல் கல்லூரி படிக்கும் போது பெண் ஒருவருடன் பழகி வந்துள்ளார். அப்போது அந்த பெண் கர்ப்பமடைந்தது வீட்டாருக்கு தெரிந்த நிலையில், 2 பேரையும் பிரித்து, வேறு திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில், தற்போது அந்த பெண், இசை கலைஞருக்கு ரூ.7 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து, அந்நபர் நேற்று (நவ.20) பாகாயம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

News November 21, 2025

வேலூரில் 658 பேருக்கு ரத்து!

image

வேலூரில் கடந்த ஜனவரி – அக்டோபர் வரை போலீசார் பரிந்துரையின் பேரில், மொத்தம் 658 பேரின் வாகன ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். விபத்துகளில் உயிரிழப்பை ஏற்படுத்தியதாக 73 பேர், குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக 85 பேர், அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 129 பேர், செல்போன் பேசி கொண்டு வாகனம் ஓட்டியதாக 14 பேரின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!