News January 7, 2026
வேலூர்: பொங்கல் பரிசு ரூ.3000 – CHECK பண்ணுங்க!

வேலூர் மக்களே, பொங்கல் பரிசாக ரூ.3000, பச்சரிசி, வெல்லம் மற்றும் நீளகரும்பு தமிழக அரசு வழங்க உள்ளது. உங்களுக்கு ரூ.3000 இருக்கா இல்லையான்னு தெரியலையா, அதை தெரிஞ்சுக்க <
Similar News
News January 9, 2026
வேலூர் எஸ்பி அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர் நியமனம்

வேலூர் மாவட்டம் பாகாயம் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த நாகராஜன் அரியூர் காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் தற்போது வேலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்துக்கு தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராகவும் நாகராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த பணியிடம் கடந்த ஓராண்டுக்கு மேலாக காலியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
News January 9, 2026
வேலூர்: மது பாட்டில் பதுக்கல்; இருவருக்கு காப்பு!

பேரணாம்பட்டு காவல் ஆய்வாளர் பிரபு தலைமையில் நேற்று (ஜன.8 ) போலீசார் மதுவிலக்கு வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, கோட்டைச்சேரி கிராமத்தை சேர்ந்த விஸ்வா (27) மற்றும் லட்சுமணன் (24) ஆகியோரிடம் இருந்து 90 கர்நாடக மாநில மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவர் மேலும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
News January 9, 2026
வேலூர் சாலையில் சிதறின மூட்டைகள்; அடுத்தடுத்து விபத்து!

வேலூர் சத்துவாச்சாரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று (ஜன.8) மாலை சிமெண்டு மூட்டைகளை ஏற்றி சென்ற மினி வேன் சாலை நடுவே உள்ள தடுப்புக்கம்பியின் மீது மோதி விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது. இதனால் மினி வேனில் இருந்த சிமெண்டு மூட்டைகள் சாலையில் சிதறின. உடனே பின்னால் வந்து கொண்டிருந்த கார், கவிழ்ந்து கிடந்த மினி வேன் மீது மோதியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.


