News December 18, 2025
வேலூர்: பேருந்தில் Luggage-ஐ மறந்தால்; இதை செய்யுங்க

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். ஷேர் பண்ணுங்க.
Similar News
News December 23, 2025
வேலூர், வரும் 28-ம் தேதி இலவச கண் சிகிச்சை முகாம்

வேலூர் மாவட்ட வெல்லம் மண்டி வியாபாரிகள் சங்கம் மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து வரும் டிசம்பர் 28-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை காட்பாடி காந்தி நகரில் உள்ள ரங்காலயா திருமண மண்டபத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது. எனவே இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 22, 2025
வேலூர்: கால்வாயில் தவறி விழுந்த துப்புரவு பணியாளர் பலி!

வேலூர் சேனூர் பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவர் சேனூர் பஞ்சாயத்தில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று அந்த பகுதியில் உள்ள ஒரு கால்வாயில் தவறி விழுந்தார். இதில் தலையில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த விருதம்பட்டு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News December 22, 2025
வேலூர்: டிகிரி போதும் அரசு வேலை ரெடி

1. தமிழ்நாடு மத்திய கூட்டுறவு வங்கியில் 50 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. கல்வி தகுதி: Any Degree, Cooperative Training முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.32,020 முதல் 96,210 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் <
5. விண்ணப்பிக்க கடைசி தேதி: டிச.31. சூப்பர் வாய்ப்பு! உடனே ஷேர் பண்ணுங்க.


