News January 9, 2026

வேலூர் பெண் குழந்தைக்கு ரூ.50,000!

image

பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <>கிளிக் <<>>(அ) மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE NOW!

Similar News

News February 11, 2026

வேலூர்: தீயில் கருகிய டீ மாஸ்டர்!

image

எம்.வி.குப்பத்தை சேர்ந்த ஜெயக்குமார் (43), ஆந்திராவில் டீ மாஸ்டர் வேலை செய்து வந்தார். இவர் 2-ந் தேதி தனது அண்ணன் வீட்டிற்கு வந்துள்ளார். பின் 8-ந் தேதி இரவு மது போதையில் வீட்டில் மாடியில் பீடி குடிக்க தீக்குச்சியை பற்ற வைத்து விட்டு அணைக்காமல் தூங்கி உள்ளார். இதில் ஏற்பட்ட தீ விபத்தில் ஜெயக்குமார் தீயில் கருகி படுகாயமடைந்த இவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News February 11, 2026

வேலூர்: வீடு திரும்பியவருக்கு பேரதிர்ச்சி!

image

வேலூரை அடுத்த புதுவசூரைச் சேர்ந்த லேப் டெக்னீசியன், பிலீப்ரிச்சர்ட் (49). இவர் கடந்த 5-ந் தேதி குடும்பத்துடன் சென்னைக்கு சென்றார். தொடர்ந்து பிப்ரவரி 9-ம் தேதி வீடு திரும்பிய குடும்பம் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு 28 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தது. இதுகுறித்து சத்துவாச்சாரி காவல் நிலைய 7 பேர் கொண்ட தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 10, 2026

வேலூர் : Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

image

வேலூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <>இந்த லிங்கில்<<>> சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!