News April 25, 2025

வேலூர் பெண்களிடம் இருக்க வேண்டிய எண்கள்

image

பெண்களுக்கு எதிராக பல குற்றச்சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே, அனைத்து பெண்களும் மகளிர் காவல் துறை எண்களை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. குடியாத்தம்- 04171 229100 , வேலூர்- 0416 2221204. இந்த எண்களை உங்களுக்கு தெரிந்த அனைத்து பெண்களுக்கும் பகிர்ந்து சேவ் பண்ண சொல்லுங்கள்.

Similar News

News April 25, 2025

மயங்கி விழுந்து பெண் உயிரிழப்பு

image

கே.வி. குப்பம் திருமணியை சேர்ந்தவர் மேஸ்திரி ஆதிகேசவன். இவரது மனைவி ரம்யா (25). இருவரும் காதலித்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளனர். நேற்று வீட்டில் ரம்யா திடீரென மயங்கி விழுந்தார். அவரை மீது அவரது குடும்பத்தினர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ரம்யா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து லத்தேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News April 25, 2025

காட்பாடி ரயிலில் 450 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

image

அசாம் மாநிலத்தில் இருந்து பெங்களூரு செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காட்பாடி ரயில் நிலையம் வந்தது. காட்பாடி ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையில் போலீசார் ரயில் பெட்டியில் ஏறி சோதனை செய்தனர். அப்போது ரயிலின் பின்புறம் உள்ள பொது பெட்டியில் 15 பைகளில் சுமார் 450 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கேட்பாரற்று கிடந்த ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

News April 25, 2025

இ-சேவையில் 60 ரூபாய்க்கு இத்தனை வசதியா?

image

அரசு இ – சேவை மையங்களில் ஆவணங்கள் தொடர்பான பிரச்னைகளை வெறும் 60 ரூபாயில் முடித்துவிடலாம். ஆம், பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, குடிபெயர்வு, விவசாய வருமானம், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், தமிழ் வழியில் படித்ததற்கான சான்று உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு வெறும் 60 ரூபாய் கட்டணம் போதும். வெளியே சென்று விண்ணப்பித்தால் ரூ.100+க்கு மேல் வசூலிக்கப்படும். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!