News December 14, 2024
வேலூர் புதிய பொலிவுடன் தயாராகும் அருங்காட்சியகம்

வேலூர் கோட்டையில் உள்ள தமிழ்நாடு அரசின் அருங்காட்சியகமானது பழைய கட்டிடம் ஒன்றில் இயங்கி வருகிறது. இதையடுத்து அருங்காட்சியத்தை புதுப்பிக்க ரூ. 96 லட்சத்து 88 ஆயிரம் ஒதுக்கப்பட்டு, பொதுப்பணித்துறை மூலம் அருங்காட்சியகம் புதுப்பிக்கும் பணிகள் கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது இதுவரை 85 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது என தெரிவித்தனர்.
Similar News
News August 9, 2025
மாரத்தானில் பங்கேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து வேலூர் நேதாஜி ஸ்டேடியம் வரை நடைபெற்ற போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மரத்தான் போட்டியில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் பங்கேற்று ஓடினார். இந்த மரத்தான், போதைப்பொருள் தடுப்பு மற்றும் இளைஞர்களுக்கு உடல்நலத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டது.
News August 9, 2025
வேலூர் மாவட்டத்திற்கு எச்சரிக்கை. கவனம் மக்களே!

வேலூர் உள்ளிட்ட 24 மாவட்டங்களில் இன்று இரவு வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே வேலூரில் உள்ள மக்கள் வெளியில் செல்லும் போது உரிய உபகரணங்களை உடன் கொண்டு செல்லுங்கள். இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய உள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்படலாம் எனவே மெழுகுவர்த்தி போன்றவற்றை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க
News August 9, 2025
உத்திர காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு – எச்சரிக்கை

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்ததால், உத்திர காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பலத்த நீர்வரத்தால் ஆற்றுப்பாலம் மற்றும் குறுக்கு வழிகள் நீரில் மூழ்கி, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுற்றுப்புற பாசன கால்வாய்கள் நிரம்பி வழிந்ததால், விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின. பாதுகாப்பு காரணமாக மக்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.