News December 30, 2025
வேலூர்: பிளஸ்-2 மாணவி தற்கொலை!

வேலூர் அடுத்த விரிஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தி. இவரது மகள் பிரியாமணி. அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். பிரியாமணி அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருந்தாக தெரிகிறது. இதை ஜெயந்தி கண்டித்ததால் மனவேதனை அடைந்த மாணவி நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 22, 2026
வேலூர்: தவறாக அனுப்பிய Payment -ஐ இனி திரும்பப் பெறலாம்

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
News January 22, 2026
வேலூர்: இடைநிலை ஆசிரியர்கள் தர்ணா போராட்டம்

வேலூர் பெரியார் பூங்கா அருகே உள்ள மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் நேற்று (ஜன.21) 3-வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் 2009 ஜூன் 1க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் ஏராளமான கலந்து கொண்டனர்.
News January 22, 2026
வேலூரில் தொழில் உரிமம் புதுப்பிக்க கடைசி நாள்!

தொழில் உரிமம் புதுப்பிப்பது தொடர்பான வணிகர் சங்க நிர்வாகிகளுக்கு விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அலுவலகத்தில் நேற்று (ஜன.22) நடைபெற்றது. இதில் வேலூர் மண்டல மாவட்ட தலைவர் ஞானவேல், மாநகராட்சி சுகாதார அலுவலர் பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் மாநகராட்சி எல்லையில் உள்ள கடைகளின் தொழில் உரிமத்தை புதுப்பிக்க வரும் 31ம் தேதி கடைசி என்பது அறிவிக்கப்பட்டது.


