News November 20, 2025
வேலூர்: பிணையம் இல்லாமல் ரூ.10 கோடி வரை கடன்!

புதிய சிறு, குறு நிறுவனங்களை தொடங்குபவர்களுக்கு ரூ.10 கோடி வரை பிணையமில்லாத கடன்களை பெற உதவி செய்கிறது மத்திய அரசின் CGTMSE திட்டம். இந்த CGTMSE திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வங்கிகளை அணுகி, வணிக கடனுக்கு விண்ணப்பித்த பிறகு, பிணையமோ அல்லது மூன்றாம் தரப்பு உத்தரவாதமோ இல்லாமல் ரூ.10 கோடி வரை கடன் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு இங்கு <
Similar News
News November 20, 2025
வேலூர் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் ஒத்தி வைப்பு!

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (நவ.21) நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நிர்வாக காரணங்களை முன்னிட்டு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (நவ.20) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
News November 20, 2025
வேலூர் உழவர் சந்தைகளில் 39.10 லட்சம் வர்த்தகம்!

வேலூர், வேலூர் டோல்கேட், காகிதப்பட்டறை, காட்பாடி, குடியாத்தம், பள்ளிகொண்டா, பேரணாம்பட்டு ஆகிய 6 உழவர் சந்தைகளில் கார்த்திகை மாத அமாவாசையொட்டி நேற்று (நவ.19) ஒரே நாளில் 93 மெட்ரிக் டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் 39 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது என உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர்.
News November 20, 2025
அடுக்கம்பாறை: நடுரோட்டில் பயணிகளை இறக்கி விட்ட அரசு பஸ்!

வேலூரில் இருந்து அடுக்கம்பாறை அடுத்த ஆற்காட்டான் குடிசை கிராமத்திற்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று காலை அரசு பஸ் சென்றது. அடுக்கம்பாறை சென்றதும் காலதாமதம் ஆகிவிட்டதால் பஸ்சில் இருந்த பணிகளை நடுரோட்டில் இறக்கிவிட்டு திரும்பி சென்றனர். இதனால் பஸ்சில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் கடும் அவதியடைந்தனர். இதுகுறித்து போக்கு வரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.


