News March 26, 2025
வேலூர் பிஎஃப் அலுவலகம் சார்பில் நாளை சிறப்பு முகாம்

வேலூர் மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில் ‘நிதிஆப்கே நிகட் 2.0’ எனும் முகாம் நாளை (மார்ச் 27) வேலூர் ஜி.பி.எச். சாலையிலுள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனங்களின் முதலாளிகள், தொழிலாளர்களின் கடமைகள், பொறுப்புகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட உள்ளது என தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையர் எம்.எச்.வார்சி தெரிவித்துள்ளார்.
Similar News
News December 22, 2025
வேலூர் துணை மின் நிலையத்தில் மின் தடை

வேலூர் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (டிச.23) காலை 9 மணி முதல் 5 மணி வரை புதிய பேருந்து நிலையம், தோட்டப்பாளையம், வேலூர் டவுன் பஜார், சலவன் பேட்டை, அண்ணா சாலை, அப்துல்லாபுரம், கிருஷ்ணா நகர், பிஷப் டேவிட் நகர், கஸ்பா, கோணவட்டம், கொசப்பேட்டை, ஓல்ட் டவுன், சார்பனா மேடு அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 22, 2025
வேலூர் கலெக்டர் அறிவித்தார்!

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில மாவட்ட தொழில் மையம் சார்பில் தொழிற்கடன் முகாம் நாளை (டிச.23) நடைபெற உள்ளது. இதர துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் சுய வேலைவாய்ப்பு திட்டங்கள் மற்றும் இதர கடன் திட்டங்கள் குறித்து துறைசார்ந்த அதிகாரிகள், வங்கி அலுவலர்கள் கலந்து கொண்டு விளக்கி பேசுகின்றனர். எனவே இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
News December 22, 2025
வேலூர்: பெண்களை கட்டையால் தாக்கி செயின் பறிப்பு!

பள்ளிகொண்டா அடுத்த ஒதியத்தூர் புதுமனை பகுதியைச் சேர்ந்தவர்கள் முருகம்மாள்( 65), பிலோமினா(54). நேற்று(டிச.21) அதிகாலை 2 பேரும் அதே பகுதியில் இயற்கை உபாதை கழிக்க நடந்து சென்றனர். அப்போது மர்ம நபர் ஒருவர் 2 பேரையும் கட்டையால் தாக்கி முருகம்மாள் அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார். அவரை பிடித்த பள்ளிகொண்டா போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.


