News December 27, 2025
வேலூர்: பால் வியாபாரி பைக் விபத்தில் பலி!

கே.வி.குப்பம் தாலுகா பி.கே.புரம் மேல் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம். பால் வியாபாரியான இவர், காட்பாடி தேசிய நெடுஞ்சாலையில் குடியாத்தம் நோக்கி பைக்கில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக பின்னால் வந்த பைக் மகாலிங்கத்தின் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 16, 2026
வேலூரில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!

தி.மலையை சேர்ந்த சிறுமி (14) குடியாத்தத்தில் உறவினர் வீட்டில் தங்கி 9-ம் வகுப்பு படித்து வந்தாள். வயிற்று வலியால் துடித்த சிறுமியை தி.மலை அரசு மருத்துவமனை டாக்டர்கள் பரிசோதித்த போது சிறுமிக்கு பாலியல் தொல்லை நடந்திருப்பது தெரியவந்தது. இதில் குடியாத்ததை சேர்ந்த கமலேஷை (23) போலீசார் கைது செய்தனர். தற்போது காவல் நிலையத்தில் இருந்து கைதி தப்பி ஓடிய நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News February 16, 2026
வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைக்க உள்ள முதல்வர்!

வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் ஆய்வகங்களை நாளை (பிப்ரவரி 16) காலை 10:30 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்க உள்ளார். இதில் கலெக்டர் சுப்புலட்சுமி, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 15, 2026
வேலூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க


