News August 31, 2025

வேலூர்: பஸ் நிலையத்தில் பணம் திருட்டு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பூர்ணிமா (51), நேற்று வேலூர் புதிய பஸ் நிலையத்தில் பஸ்ஸுக்காக காத்திருந்தனர். அப்போது இரு பெண்கள் அவரது பர்சிலிருந்து 1500 ரூபாயை திருடினர், இதுகுறித்து வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார், செங்கத்தைச் சேர்ந்த சத்யா (32), பாரதி (35) ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர். திருட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News August 31, 2025

வேலூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பாதுகாப்பு நடவடிக்கை

image

வேலூர் மாவட்ட காவல்துறையால் ,ஆகஸ்ட் 31 2025 அன்று இரவு பாதுகாப்பு பணிக்காக ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மற்றும் கடலூர் சாலைகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பொறுப்பான காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர தேவைகளுக்கு கட்டுப்பாட்டு அறை எண்கள் வெளியிடப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

News August 31, 2025

வேலூர்: கேஸ் சிலிண்டர் இருக்கா? இது கட்டாயம்

image

வேலூர் மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். வேறு எதேனும் உதவி தேவைப்பட்டால் 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். (கேஸ் சிலிண்டர் வைத்துள்ளோருக்கு SHARE பண்ணுங்க)

News August 31, 2025

காட்பாடி விஐடி பல்கலை கழகத்தில் ஓணம் விழா

image

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தில் ஓணம் பண்டிகை விழா இன்று (ஆகஸ்ட் 31)  கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகையும் பின்னணி பாடகருமான ரம்யா நம்பீசன் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

error: Content is protected !!