News January 1, 2026

வேலூர்: பள்ளி மாணவிக்கு காதல் டார்ச்சர் கொடுத்த வாலிபர்!

image

வேலூர் கஸ்பா வசந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் சக்தி, இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயதுடைய பள்ளி மாணவியிடம் காதலிக்க சொல்லி வற்புறுத்தி வந்துள்ளார். இதுகுறித்து பள்ளி மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் நேற்று (டிச.31) வேலூர் மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் சக்தி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News January 1, 2026

வேலூர்: ரூ.50 கட்டினால் ரூ.1 லட்சம் கிடைக்கும்

image

வேலூர், போஸ்ட் ஆபிஸில் உள்ள RD திட்டத்தில் தினமும் ரூ.50 என்ற அடிப்படையில் மாதம் ரூ.1,500 கட்டினால், 5 ஆண்டு முடிவில் 6.7% வட்டியுடன் 1,07,050 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம். இதே போல் 100 ரூபாய் என்ற வீதத்தில் சேமித்தால் 2,12,972 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம். எதிர்காலத்தில் இந்த தொகை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இத்திட்டத்தில் இணைய அருகில் உள்ள போஸ்ட் ஆபிஸ் அலுவலகத்தை அனுகவும். (SHARE)

News January 1, 2026

வேலூர் மக்களே வீட்டில் வோல்டேஜ் பிரச்சனையா?

image

வேலூர் மக்களே, வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News January 1, 2026

வேலூர் எம்.பி. முதல்வரைச் சந்தித்து வாழ்த்து

image

வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர், திமுக வேலூர் வடக்கு மாவட்ட செயலாளர் டி.எம். கதிர் ஆனந்த் 2026 ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
​இந்தச் சந்திப்பின்போது, அவர் முதல்வருக்குப் பூங்கொத்து வழங்கி தனது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். உடன் திமுக நிர்வாகிகள் இருந்தனர்.

error: Content is protected !!