News November 6, 2025
வேலூர்: பள்ளி பேருந்து மோதியதில் சிறுமி பலி

வேலூர்: வரதரெட்டிபள்ளி பகுதியை சேர்ந்த ஜெயச்சந்திரன் – மோனிகா தம்பதியின் மகள் கீர்த்தீஷா (4) பரதராமியில் உள்ள தனியார் பள்ளியில் LKG படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று (நவ.5) மாலை பள்ளி பேருந்தில் இருந்து இறங்கி முன்பக்கமாக நடந்து வந்துள்ளார். இதை கவனிக்காமல் ஓட்டுநர் தமிழ்செல்வன் பேருந்தை இயக்கியதால், சிறுமி மீது பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
Similar News
News November 6, 2025
வேலூர்: விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் வருகிற நவம்பர் 15-ம் தேதிக்குள் வேளாண் அடுக்கக அடையாள எண்ணை பெற்றால் மட்டுமே பி.எம்.கிசான் தொகையை தொடர்ந்து பெற முடியும். எனவே இதுவரை அடையாள எண் பெறாத விவசாயிகள் உடனடியாக ஆதார் கார்டு, சிட்டா ஆகியவற்றுடன் அருகே உள்ள பொது சேவை மையம் அல்லது வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம். என மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஸ்டீபன் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
News November 6, 2025
வேலூர்: கர்பிணி பெண் கிணற்றில் குதித்து பலி!

கே.வி.குப்பம், பசுமாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் யோகானந்தன். இவரது மனைவி சாந்தினி (27). கர்ப்பிணியான இவர் வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் நேற்று (நவ.05) மர்மமான முறையில் இறந்துகிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த கே.வி.குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாந்தினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News November 6, 2025
வேலூர்: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

வேலூர் மக்களே, கேஸ் சிலிண்டர் புக் செய்ய நீங்கள் நேரில் செல்ல தேவையில்லை. உங்கள் வாட்ஸ்அப் மூலமாக எளிதாக & விரைவான புக் செய்யலாம். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களுக்கு, வாட்ஸப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். ஷேர் பண்ணுங்க!


