News June 12, 2024
வேலூர் பள்ளி, கல்லூரி அருகே போதைப்பொருள் பறிமுதல்

வேலூர் எஸ்பி மணிவண்ணன் உத்தரவின்பேரில் டிஎஸ்பிக்கள் திருநாவுக்கரசு, சரவணன், ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் பள்ளி மற்றும் கல்லூரிகள் அருகே உள்ள 183 கடைகளில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் 2.130 கிலோ கிராம் எடையுள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News August 9, 2025
வேலூரில் மாரத்தான் போட்டி

காட்பாடி அருகே உள்ள சித்தூரில் இன்று (ஆகஸ்ட் 9) மாரத்தான் போட்டி நடைபெற்றது. போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த மரத்தான் போட்டியில், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் போட்டியாளராக பங்கேற்று ஓடினார். சித்தூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து வேலூர் நேதாஜி மைதானம் வரை போட்டி நடைபெற்றது. சிறுவர், சிறுமிகள், பெரியவர்கள் என பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
News August 9, 2025
வேலூர் ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு…

வேலூர் மாவட்டத்தில், ரேஷன் கார்டு திருத்தம் செய்யும் சிறப்பு முகாம் இன்று (ஆகஸ்ட் 9) நடைபெறுகிறது. வேலூரில் மேல்வல்லம், காட்பாடியில் உள்ளி புதூர், அணைக்கட்டில் கீலாச்சூர் மற்றும் வெப்பந்தல், குடியாத்தத்தில் ராமாலை மற்றும் காந்தி கணவாய், கே.வி.குப்பத்தில் காளம்பட்டு, பேரணம்பட்டில் பரவக்கல் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை முகாம் நடைபெறும். ஷேர் பண்ணுங்க <<17348849>>தொடர்ச்சி<<>>
News August 9, 2025
வேலூர் ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு…

ரேஷன் கார்டு திருத்த முகாமில், ரேஷன் கார்டில் உறுப்பினர் சேர்க்கை / நீக்கம், பெயர் மாற்றம், முகவரி மாற்றம், குடும்ப தலைவர் மாற்றம், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க போன்ற பல்வேறு சேவைகளை செய்யலாம். முகாம்கள் அந்தந்த வட்டங்களில் எங்கு நடைபெறுகிறது என்பதை அதிகாரிகளை (வேலூர் – 0416-2252586, 0416-2220519, குடியாத்தம் – 04171-221177, காட்பாடி – 0416-2244647) தொடர்பு கொண்டு கேளுங்கள். ஷேர் பண்ணுங்க