News November 4, 2025

வேலூர்: பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

image

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இணையதளத்திற்கு eservices.tn.gov.in/eservicesnew/index செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் மாவட்டம், வட்டம், கிராமம் பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். (SHARE IT NOW)

Similar News

News November 4, 2025

வேலூர்: ரூ.71,900 சம்பளத்துடன் அரசு வேலை!

image

தமிழத்தில் காலியாக உள்ள 1,429 HEALTH INSPECTOR பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, MPHW/ சுகாதார ஆய்வாளர் ஆகிய படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், 18-60 வயதிற்குள் இருக்க வேண்டும். இதற்கு ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் <>இங்கு க்ளிக் <<>>செய்து நவ.16க்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்களுக்கு கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும்.

News November 4, 2025

ரூ.11.80கோடி மதிப்பிலான திட்டங்களை துவக்கிவைத்த து.முதல்வர்

image

வேலூரில் இன்று (நவ.04) நடைபெற்ற அரசு விழாவில், ரூ.11.80 கோடி மதிப்பிலான 31 முடிவுற்ற திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், ரூ17.91 கோடி மதிப்பிலான 15 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். உடன் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுபுலட்சுமி, MP கதிர் ஆனந்த், MLA கார்த்திகேயன், நந்தகுமார், அமுலு விஜயன் மேயர் சுஜாதா பலர் கலந்து கொண்டனர்.

News November 4, 2025

சிடி ஸ்கேன் மையத்தை திறந்து வைத்த துணை முதலமைச்சர்

image

வேலூர், ஸ்ரீபுரத்தில் உள்ள ஸ்ரீ நாராயணி மருத்துவனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் அதிநவீன சி.டி.ஸ்கேன் மையத்தை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (நவ.04) திறந்து வைத்தார். இந்த புதிய வசதி வேலூர் மாவட்ட மக்களுக்கு மட்டுமின்றி அனைத்து மாவட்ட மக்களுக்கும் பயன்பெறட்டும் என்று வாழ்த்துரை வழங்கினார். இதில் வேலூர் எம்பி கதிர் ஆனந்த் MLA கார்த்திகேயன் நந்தகுமார் உடன் இருந்தனர்.

error: Content is protected !!