News December 12, 2025

வேலூர்: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

image

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

Similar News

News December 15, 2025

வேலூர்: கூட்டுறவு வங்கியில் வேலை! APPLY

image

வேலூர் மாவட்ட மக்களே.., தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.32,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க டிச.31ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 15, 2025

வேலூர்: விபத்தில் வாலிபர் துடிதுடித்து பலி!

image

திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் (24). இவர் நேற்றிரவு பேரணாம்பட்டு அருகே உள்ள நண்பரை பார்ப்பதற்காக பைக்கில் வந்துள்ளார். அப்போது பக்காலாபல்லி அருகே சாலை விரிவாக்கப் பணிக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த பேரணாம்பட்டு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

News December 15, 2025

வேலூர்: 8 பவுன் நகை திருடிய 2 பெண்கள்!

image

விருபாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் சக்திவேல்(41). இவருடைய மணைவி இளையராணி(37) . கடந்த அக்டாபர் மாதம் சக்திவேலுக்கு விபத்து ஏற்பட்டு திண்டுக்கல்லில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு அவரது வீட்டில் 8 பவுன் நகை திருடு போனது. இதுகுறித்த விசாரணையில், கீழ்தளத்தில் குடியிருக்கும் லட்சுமி, அஞ்சலி ஆகியோர் தங்களது கணவர்கள் உதவியுடன் திருடியது தெரியவந்தது.

error: Content is protected !!