News September 30, 2025
வேலூர்: நினைவுச் சின்னம் பற்றி தெரியுமா…?

வேலூரின் நினைவுச் சின்னங்களில் ஒன்று வேலூர் கோட்டை. இக்கோட்டையானது கி.பி.1526-கி.பி.1595 வரையிலான காலத்தில் சின்ன பொம்மி நாயக்கர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. இக்கோட்டை தென்னிந்தியாவின் இராணுவக் கட்டடக் கலையின் ஒரு மிகச்சிறந்த உதாரணமாக உள்ளது. கோட்டையின் உள்ளே உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயில் விஜயநகரப் பேரரசின் கட்டடம் கலையின் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. உங்க ஊர் பெருமைகளை அறிய ஷேர் பண்ணுங்க.
Similar News
News March 28, 2026
வேலூர் தேர்தல் பணியில் முன்னாள் படைவீரர்கள்

வேலூர் மாவட்டத்தில் முன்னாள் ராணுவவீரர்கள், துணை ராணுவப்படை வீரர்கள் மற்றும் ஓய்வுபெற்ற சீருடை பணியாளர்கள் (காவல்துறை, சிறைத்துறை, வனத்துறை, தீயணைப்பு துறை) ஆகியோர் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் தங்கள் விவரங்களை வேலூர் மாவட்ட காவல்துறை தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். என வேலூர் எஸ்பி அலுவலக செய்தி குறிப்பில்
News March 28, 2026
வேலூர்: மக்களுக்கு முக்கிய அறிவுரை வழங்கிய ஆட்சியர்!

வேலூர் மாவட்டத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதிலிருந்து பாதுகாத்து கொள்ள பொதுமக்கள் தண்ணீர், மோர், அரிசி கஞ்சி, இளநீர், எலுமிச்சைச்சாறு மற்றும் ஓஆர்ஸ் உப்புகரைசல் போன்ற திரவ உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அத்தியாவசியமில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று (மார்ச்.27) வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.
News March 28, 2026
வேலூரில் முதியவர் துடிதுடித்து பலி!

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், காலை கோவில் முதியவர் ஒருவர் நீண்ட நேரமாக அசைவற்ற நிலையில் கிடப்பதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அருகில் சென்று பார்த்தபோது அவர் ஏற்கனவே உயிரிழபந்திருப்பது தெரியவந்தது. இது குறித்து மேல்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


