News April 20, 2024

வேலூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் நன்றி மடல்

image

நாடாளுமன்றத் தேர்தல் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்றது. அதிமுக சார்பில் வேலூர் நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் பசுபதி அவர்கள் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்காக ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி கூறி வாழ்த்து மடல் அனுப்பியுள்ளார். அதில் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அனைத்து அதிமுக உறுப்பினர்கள், பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Similar News

News November 24, 2025

வேலூர்: கால்வாயில் மிதந்து வந்த பெண் சிசு!

image

வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை வெளியே உள்ள கால்வாயில் பெண் சிசு ஒன்று இறந்த நிலையில் மிதந்து கொண்டு இருந்தது. இதை இன்று பார்த்த அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து வேலூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் பெண் சிசுவை கால்வாயில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து குழந்தையை வீசி சென்ற நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

News November 24, 2025

வேலூர்: அரசு தேர்வர்களே.. இதை கவனியுங்க!

image

அரசுத் தேர்வுகளுக்கு வீட்டில் இருந்தே தயாராகும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பயனுள்ள சில இணையதளங்கள் உள்ளன. அவற்றின் மூலம், Mock Tests, Reasoning Materials மற்றும் Notes-களை முற்றிலும் இலவசமாகவே பயன்படுத்திக்கொள்ள முடியும். <>இங்கு கிளிக்<<>> செய்து, வழங்கப்பட்டுள்ள இணையதளங்களை பயன்படுத்திக்கொள்ளுங்கள். இந்த பயனுள்ள தகவலை அரசு தேர்வுக்கு தயாராகும் நண்பர்களுக்கு பகிருங்கள்!

News November 24, 2025

வேலூர்: சிலிண்டர் பயனாளிகள் கவனத்திற்கு!

image

வேலூர் மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை புக் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!