News March 20, 2024

வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் அறிவிப்பு

image

வேலூர் மக்களவைத் தொகுதியின் வேட்பாளராக கதிர் ஆனந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல்-2024 தமிழகத்தில் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று (மார்ச் 20) அக்கட்சியின் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

Similar News

News August 8, 2025

வேலூர் SBI வங்கிகளில் வேலை…

image

SBI வங்கியில் Customer Support மற்றும் Sales பிரிவில் உள்ள ஜூனியர் அசோசியேட் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 5,180 பணியிடங்கள். தமிழகத்தில் மட்டும் 380 பணியிடங்கள். 20 – 28 வயதுடைய டிகிரி படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும். ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை சம்பளம் வழங்கப்படும். இந்த <>லிங்கில் <<>>வரும் 26ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யுங்கள்

News August 8, 2025

BREAKING: வேலூரில் மிக கனமழை

image

வேலூரில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், வேலூரில் இன்று (ஆகஸ்ட் 8) இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள். அனைவருக்கும் உடனே ஷேர் பண்ணுங்க

News August 8, 2025

வேலூர் மாவட்டத்தில் நாளை உங்களுடன் ஸ்டாலின்

image

வேலூர் மாவட்டத்தில் நாளை அணைக்கட்டு வட்டாரத்திற்கு நேமந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கணியம்பாடி வட்டாடத்திற்கு வல்லம் குமரன் மஹால், கே.வி.குப்பம் வட்டாரத்திற்கு கீழ் ஆலத்தூர் ஜி.வி.எஸ் மஹால் ஆகிய இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்கள் மனுக்களை அளித்து பயன்பெறலாம்

error: Content is protected !!