News September 28, 2025
வேலூர்: தேர்வு TNPSC எழுதுவோர் கவனத்திற்கு!

வேலூர் மாவட்டத்தில், TNPSC சார்பில், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு இன்று (செப்-28) நடைபெறுகிறது. தேர்வு எழுத வரும் மாணவர்கள், காலை 8.30 மணிக்குள் தேர்வுக்கூடத்திற்கு வந்துவிட வேண்டும். ஹால் டிக்கெட் மற்றும் புகைப்பட அடையாள அட்டையுடன் வருவது கட்டாயம். மின்னணு சாதனங்களுக்கு அனுமதி இல்லை.தேர்வு எழுத கருப்பு நிற மை பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தேர்வு எழுத செல்வோருக்கு ஷேர் பண்ணுங்க
Similar News
News February 11, 2026
வேலூர்: தீயில் கருகிய டீ மாஸ்டர்!

எம்.வி.குப்பத்தை சேர்ந்த ஜெயக்குமார் (43), ஆந்திராவில் டீ மாஸ்டர் வேலை செய்து வந்தார். இவர் 2-ந் தேதி தனது அண்ணன் வீட்டிற்கு வந்துள்ளார். பின் 8-ந் தேதி இரவு மது போதையில் வீட்டில் மாடியில் பீடி குடிக்க தீக்குச்சியை பற்ற வைத்து விட்டு அணைக்காமல் தூங்கி உள்ளார். இதில் ஏற்பட்ட தீ விபத்தில் ஜெயக்குமார் தீயில் கருகி படுகாயமடைந்த இவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News February 11, 2026
வேலூர்: வீடு திரும்பியவருக்கு பேரதிர்ச்சி!

வேலூரை அடுத்த புதுவசூரைச் சேர்ந்த லேப் டெக்னீசியன், பிலீப்ரிச்சர்ட் (49). இவர் கடந்த 5-ந் தேதி குடும்பத்துடன் சென்னைக்கு சென்றார். தொடர்ந்து பிப்ரவரி 9-ம் தேதி வீடு திரும்பிய குடும்பம் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு 28 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தது. இதுகுறித்து சத்துவாச்சாரி காவல் நிலைய 7 பேர் கொண்ட தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 10, 2026
வேலூர் : Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

வேலூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <


