News December 28, 2025
வேலூர்: திருநங்கையின் கழுத்தை அறுத்த நண்பர்!

வேலூர்: அப்துல்லாபுரத்தில் திருநங்கை ரசிகா மற்றும் வினோத்குமார் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வினோத், நேற்று ரசிகாவுக்கு “சர்ப்ரைஸ்” தருவதாகக் கூறி அழைத்துச் சென்று கழுத்தை அறுத்து கொலை செய்தார். மேலும், போலீசுக்கு பயந்த அவர், கிணற்றில் குறித்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்த வழக்கில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 6, 2026
வேலூர்: சினிமா பாணியில் சேஸ் செய்து போலீசார் அதிரடி!

பரணாம்பட்டு -வீ.கோட்டா சாலையில் பேரணாம்பட்டு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது எருக்கம்பட்டு-கோட்டையூர் வழியாக 2 பேர் கர்நாடக மதுபாக்கெட்டுகளை கடத்தி வந்தனர். இதையறிந்த போலீசார் பைக்கில் 1 கி.மீ தூரத்துக்கு சினிமா பாணியில் துரத்தி சென்றனர். இதையறிந்த ஆசாமிகள் ரூ. 1 லட்சம் மதிப்பிலான மதுபாக்கெட்டுகள் போட்டுவிட்டு தப்பினர். போலீசார் தற்போது தப்பி ஓடியவர்கள் தேடி வருகின்றனர்.
News February 6, 2026
வேலூர்: மனைவியின் சேலையில் தூக்கிட்ட கணவன்!

தொரப்பாடி, சுப்பிரமணி தெருவை சோ்ந்தவா் ராஜா (61). இவா் மாடு வியாபாரம் செய்து வந்தாா். இவரது மனைவி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இவரது மகன் பெங்களூருவில் வேலை செய்து வருகிறாா். மனைவியில் பிரிவு மற்றும் தனிமை காரணமாக மன அழுத்தத்தில் இருந்த ராஜா நேற்று (பிப்.5) மாட்டு கொட்டகையில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பாகயம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News February 6, 2026
வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்!

வேலூர், காட்பாடி, குடியாத்தம், அணைக்கட்டு அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று பிப்ரவரி 05-ம் தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டது. இதில், பகுதிகளாக ரோந்து பணி நடைபெறுகிறது ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.


