News March 19, 2024
வேலூர் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்

வேலூர் மாநகராட்சி சத்துவாச்சாரி வடக்கு பகுதி 19 வட்டம் சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நேற்று (மார்ச் 18) நடந்தது. இந்த கூட்டத்திற்கு பகுதி செயலாளர் சசிகுமார் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் கலந்துகொண்டு பேசினார். மேலும் கழக செயற்குழு உறுப்பினர் ஏழுமலை முன்னோடிகள் கலந்துகொண்டனர்.
Similar News
News August 8, 2025
வேலூர் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

வேலூர் மாவட்ட காவல்துறையால் இன்று (ஆக.7) இரவு பாதுகாப்பு பணிக்காக ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மற்றும் கடலூர் சாலைகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர தேவைகளுக்கு கட்டுப்பாட்டு அறை எண்கள் வெளியிடப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
News August 8, 2025
நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் கலெக்டர் தகவல்

“நலம் காக்கும் ஸ்டாலின்” உயர் சிறப்பு மருத்துவ முகாம் வருகிற ஆகஸ்ட் 9-ம் தேதி வேலூர் மாவட்டம், ஊசூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் “நலம் காக்கும் ஸ்டாலின்” உயர் சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
News August 7, 2025
வேலூர்: பட்டா சிட்டா விபரங்களை அறிய வேண்டுமா?

வேலூர் மக்களே, உங்களது நிலம் தொடர்பான ஆவணங்கள் குறித்து எளிதில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் இதன் மூலம் தங்களது நில விவரம், பட்டா, சிட்டா திருத்தம் போன்ற சேவைகளை மேற்கொள்ளலாம் (அல்லது) அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.