News November 3, 2025
வேலூர்: தாயுமானவர் திட்ட பொருட்கள் விநியோகம்!

2025ம் ஆண்டு நவம்பர் மாதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தாயுமானவர் திட்டத்தின்கீழ் பொருட்களை வழங்கும் வகையில் நாளை நவ.03 மற்றும் 4-ஆம் தேதிகளில் “தகுதியுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது” என வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
Similar News
News November 3, 2025
வேலூர்: தமிழக அரசின் ரூ.414 கோடி நலத்திட்ட உதவிகள்!

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாளை (நவ.04) வேலூர் மாவட்டத்தில் 11.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 31 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார். மேலும் 17.91 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 15 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதை தொடர்ந்து 49,021 பயனாளிகளுக்கு 414.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார். என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
News November 3, 2025
வேலூர்: 12th PASS போதும்! ரூ.71,900 வரை சம்பளம்!

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு முடித்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News November 3, 2025
மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர்

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் இன்று (நவ.03) நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் மதுசெழியன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


