News October 23, 2024

வேலூர் சோதனை சாவடியில் விஜிலென்ஸ் அதிகாரிகள் சோதனை

image

தமிழக-ஆந்திர மாநில எல்லை பகுதியான வேலூர் மாவட்டம் காட்பாடி கிறிஸ்டியான் பேட்டை பகுதியில் உள்ள சோதனை சாவடியில் இன்று (அக்டோபர் 23) அதிகாலை விஜிலன்ஸ் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில் கணக்கில் வராத rஊ. 1.38 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இந்த திடீர் சோதனை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News

News January 26, 2026

வேலூர்: துப்பறியும் நாய் அக்னி உயிரிழப்பு!

image

வேலூர் மாவட்ட துப்பறியும் நாய் படை பிரிவைச் சேர்ந்த எக்ஸ்ப்ளோசிவ் டாக் அக்னி (AGNI) சில நாட்களாக உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்தது. இந்நிலையில் நேற்று (ஜன.25) இரவு 10.30 மணியளவில் இயற்கை எய்தியது. பல முக்கிய வழக்குகளில் பங்கு பெற்ற அக்னியின் மரணம் போலீசாரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News January 26, 2026

வேலூர்: ரூ.6 செலுத்தி ரூ.1 லட்சம் பெறலாம்!

image

வேலூர் மக்களே, போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். உடனே SHARE பண்ணுங்க!

News January 26, 2026

வேலூர்: காந்தி சிலைக்கு மாலை அணிவித்த கலெக்டர்

image

77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று (ஜனவரி 26) வேலூர் கோட்டை நுழைவு வாயிலில் உள்ள அண்ணல் மகாத்மா காந்தியடிகள் திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்த குமார், துணை மேயர் சுனில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!