News January 5, 2026
வேலூர்: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377
2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910
7.கண் வங்கி -1919
8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! இதனை ஷேர் பண்ணுங்க மக்களே.
Similar News
News January 28, 2026
வேலூர் அருகே கோர விபத்து!

அணைக்கட்டு அடுத்த கீழ்கொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமன் (31), கட்டிட மேஸ்திரி. இவர் தனது வீட்டின் மாடியில் வைத்துள்ள இரும்பு பொருட்களை எடுத்து கொண்டு கீழே வந்தார். அங்கிருந்த மின் கம்பி மீது இரும்பு கம்பி உரசியது. அப்போது அதிலிருந்து மின்சாரம் பாய்ந்து ராமன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 28, 2026
வேலூரில் துடிதுடித்து பலி!

வேலூர் சத்துவச்சாரி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற எலக்ட்ரீஷியன்கள் சுரேஷ் (45) மற்றும் தாமஸ்பெர்லின் மீது பின்னால் வந்த லாரி பயங்கரமாக மோதியது. இதில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தார். படுகாயமடைந்த தாமஸ்பெர்லின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்ப முயன்ற லாரி ஓட்டுநரைப் பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
News January 28, 2026
வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இன்று (ஜன.27) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.


