News February 16, 2026

வேலூர்: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

image

வேலூர் மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.

A – (Jan/Feb/Mar),

B – (Apr/May/Jun),

C – (Jul/Aug/Sep),

D – (Oct/Nov/Dec),

காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

Similar News

News February 17, 2026

வேலூரில் தறிகெட்டு ஓடி மரத்தில் சொருகிய ஆட்டோ!

image

வள்ளிமலை அருகே கொக்கேரி கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன். இவர் நேற்று புதிதாக ஆட்டோவை வேலூரில் உள்ள ஷோரூமில் வாங்கியுள்ளார். பின்னர் வேலூரில் இருந்து கொக்கேரிக்கு ஆட்டோவை குமரேசன் ஓட்டிச் சென்றார். மாலை சுமார் 6 மணி அளவில் சைனாம்பட்டறை பகுதியில் வேகமாக வைத்த ஆட்டோ திடீரென நிலை தடுமாறி பனை மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் குமரேசன் படுகாயம் அடைந்தார். இதில் புதிய ஆட்டோ நசுங்கி சுக்கு நூறானது.

News February 17, 2026

வேலூரில் ரத்தம் சொட்ட சொட்ட சரிந்த முதியவர்!

image

வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்தவர் ஜெயக்குமார் (73), இவர் பிப்ரவரி 15-ம் தேதி மாலை சென்னை – பெங்களூர் நெடுஞ்சாலையில் அன்பூண்டி புதிய பஞ்சாயத்து அருகே அலுவலகம் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த பைக் ஜெயக்குமார் மீது மோதியது. இதில் தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் முதியவர் பலியானார். இது குறித்து தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 17, 2026

வேலூர்: இரவு ரோந்து பணி விவரம்

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இன்று (பிப்.16) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

error: Content is protected !!