News January 16, 2026

வேலூர்: சிலிண்டர் மானியத்தை எளிதாக அறிய – CLICK

image

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.

Similar News

News January 20, 2026

வேலூர்: டூவீலர் ஃபைனை கேன்சல் செய்ய! (CLICK)

image

வேலூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>இங்கு கிளிக் செய்து<<>> உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க

News January 20, 2026

வேலூரில் 32,18,430 ரூபாய் வரி!

image

வேலூர் போக்குவரத்து சரகத்துக்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையில் 7 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு மொத்தம் 804 ஆம்னி பஸ்களில் சோதனை நடத்தப்பட்டது. அதில் விதிமீறிய 109 பஸ்களுக்கு ரூ. 2 லட்சத்து 21 ஆயிரம் அபராதமும், பிற மாநில நுழைவுவரி செலுத்தாத பஸ்களிடம் இருந்து ரூ.32 லட்சத்து 18 ஆயிரத்து 430 வரி வசூல் செய்யப்பட்டது.

News January 20, 2026

வேலூர் சிறைக்கு திரும்பிய 29 கைதிகள்!

image

வேலூர் மாவட்டம், தொரப்பாடியில் உள்ள மத்திய ஆண்கள் சிறையில் இருந்து பொங்கல் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட 29 பேருக்கு பரோல் வழங்கப்பட்டது.‌ அதன்பேரில் கைதிகள் பரோலில் சொந்த ஊருக்கு சென்றனர். இந்நிலையில் பரோல் முடிந்து அனைத்து கைதிகளும் நேற்று (ஜன.19) மீண்டும் சிறைக்கு திரும்பினர் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!