News February 12, 2026
வேலூர் சிறையில் 45 பேர் தேர்வுக்கு தயார்!

வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் உள்ள ஆண்கள் மத்திய சிறையில் இந்த ஆண்டு 15 சிறைவாசிகள் +2 தேர்வை எழுத உள்ளனர். அதேபோல் 10-ம் வகுப்பு தேர்வை ஆண்கள் சிறையில் 12 பேர், பெண்கள் சிறையில் 8 பேர் என மொத்தம் 45 கைதிகள் எழுத உள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக மத்திய சிறையில் தேர்வு மையம் அமைந்துள்ளது.
Similar News
News February 18, 2026
வேலூர் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்

வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் தனியார் நிறுவனம் சார்பில் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நேற்று (பிப்.17) நடைபெற்றது. இந்த முகாமை கல்லூரி துணைத்தலைவர் ஜனார்த்தனன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் துறைகளை சேர்ந்த 179 மாணவர்கள் பங்கேற்றனர். அதில் 87 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
News February 18, 2026
வேலூரில் தேர் சரிந்த விவகாரம்; 27 பேர் மீது வழக்கு!

வேலூரில் பிப்ரவரி 16-ம் தேதி நடைபெற்ற மயான கொள்ளை திருவிழாவில் கழிஞ்சூர் தேர் நிலை சரிந்து கவிழ்ந்தது. இதில் 7 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் நேற்று (பிப்.17) கழிஞ்சூர் விழா குழுவினர் மீது வழக்குப்பதிவு செய்தார். அரசின் பாதுகாப்பு விதிகளை முறையாக பின்பற்றாமல் அஜாக்கிரதையாக நடந்து கொண்டதாக விழா குழுவினர் 27 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
News February 18, 2026
வேலூரில் வாலிபர் மீது கொலை வெறி தாக்குதல்!

பள்ளிகொண்டாவை சேர்ந்த டிரைவர் செந்தில்குமார் (40). இவர் சம்பவத்தன்று ராமாபுரம் ரோட்டில் சென்ற போது 5 பேர் கொண்ட கும்பல் வேனை வழி மறித்து இவரை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த செந்தில்குமார் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதில் போலீசார் பிரதீப்ராஜ் (22), கார்த்தி, கவுதமன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


