News January 7, 2026
வேலூர்: சிறுமிகளின் ஆபாச படங்களை பகிர்ந்த நபர்!

குடியாத்தம் தரணம்பேட்டையை சேர்ந்த சையத் நியாஸ் (31). இவர் சிறுமிகளின் ஆபாச படங்களை இணையதளத்தில் பகிர்ந்ததாக கடந்த 2020-ம் ஆண்டு குடியாத்தம் மகளிர் போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை வேலூர் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராதாகிருஷ்ணன், சையத் நியாஸ்க்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார்.
Similar News
News January 23, 2026
வேலூர்: கவலை தீர்க்கும் கருணைக்கடல்…!

வேலூர் அனந்தலை மதுர காளியம்மன் அன்னை,வேண்டுவோருக்கு வேண்டியதை அருளும் சக்தி வாய்ந்த தெய்வமாகத் திகழ்கிறாள். இக்கோஇலில் செவ்வாய் & வெள்ளிக்கிழமைகளில் ராகு கால பூஜைகள் வெகு விசேஷமாக நடைபெரும். திருமணத் தடை நீங்கவும், குடும்ப நலன் வேண்டியும் பக்தர்கள் மாவிளக்கு ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். சாந்த சொரூபியாகக் காட்சியளிக்கும் அம்மனின் சன்னதி, பக்தர்களுக்கு மிகுந்த மன அமைதியை வழங்குகிறது. ஷேர்!
News January 23, 2026
வேலூர்: இது உங்க போன்-ல கண்டிப்பாக இருக்கனும்!

அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் போனில் உள்ளதா? இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க
1. UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF
2. AIS – வருமானவரித்துறை சேவை
3.DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள்
4.POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை
5.BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை
6.M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்
இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!
News January 23, 2026
வேலூர் முன்னாள் எம்எல்ஏவை சந்தித்த காங்கிரஸ் கட்சியினர்

மயிலார் பண்டிகையை முன்னிட்டு இன்று (ஜனவரி 22) வேலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஞானசேகரனை அவரது இல்லத்தில், வேலூர் காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் சி.கே.தேவேந்திரன், காங்கிரஸ் கட்சி துணை தலைவர் சந்திரபிரகாஷ், அலமேலுமங்காபுரம் முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து கூறினர்.


