News July 10, 2025
வேலூர் சிப்பாய் புரட்சி பற்றி தெரிஞ்சிக்கோங்க

வேலூர் சிப்பாய் கலகம் 1806-ஆம் ஆண்டு இதே நாளில் (ஜூலை 10) நடந்தது. இது இந்தியாவின் முதல் கிளர்ச்சி எனும் சிறப்பைப் பெற்றது. இந்த கலகத்திற்கு முக்கியமான காரணம், சிப்பாய்களின் மத உணர்வுகளை புறக்கணித்து, புதிய உடை விதிகளை பிரித்தானியர்கள் கட்டாயமாக்கியது ஆகும். இதில், 200க்கும் மேற்பட்ட பிரித்தானியர்கள் கொல்லப்பட்டனர். இது சுதந்திரப் போராட்டத்தின் முதல் துடிப்பாகக் கருதப்படுகிறது. ஷேர் பண்ணுங்க
Similar News
News July 10, 2025
வேலூர் 17 வயது சிறுமி கர்ப்பம் போலீசார் விசாரணை

வேலூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. அதே பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் கடந்த 2-ம்தேதி உடல்நிலை பாதிப்பு காரணமாக சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து டாக்டர்கள் வேலூர் மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News July 10, 2025
பேருந்தில் சில்லறை வாங்கவில்லையா? DON’T WORRY

பேருந்து பயணத்தில் ‘அப்றம் சில்லறையை வாங்கிக்கோங்கனு’ கன்டக்டர் சொன்ன நொடியில் இருந்து, மீதி சில்லறை கிடைக்குமோ கிடைக்காதோ என்ற பதற்றம் தொற்றிக்கொள்ளும். இனி அந்த கவலை வேண்டாம். ஒரு வேளை உங்களது மீது சில்லறையை வாங்காமல் இறங்கிவிட்டால் 18005991500-க்கு கால் பண்ணி உங்கள் டிக்கெட் விவரத்தை சொன்னால் போதும், உங்க காசை GPAY செய்து விடுவார்கள். மேலும் தகவலுக்கு(9445021303). *செம திட்டம் ஷேர் பண்ணுங்க*
News July 10, 2025
வேலூர்: சொந்த வீடு கட்ட சூப்பர் திட்டம்

ஏழை எளிய மக்களுக்கு வீடு வழங்கும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் புதியாக 1 லட்சம் வீடுகள் கட்டப்பட உள்ளது. இதில் வீடு கட்ட ரூ.3.50 லட்சம் மானியம் வழங்கப்படும். வயதானோர்/ ஆதரவற்றோருக்கு அரசே கட்டுமான பணிகளை செய்து தருகிறது. இதற்கான KVVT survey குழுவினர் பயனாளிகளை தேர்வு செய்வர். தனியாக விண்ணப்பிக்க விரும்பினால் ஊராட்சி மன்ற/ ஆட்சியர் அலுவலகத்தை(0416-2252345) அழைக்கலாம். ஷேர் பண்ணுங்க. <<17015879>>தொடர்ச்சி<<>>