News January 9, 2026
வேலூர் சாலையில் சிதறின மூட்டைகள்; அடுத்தடுத்து விபத்து!

வேலூர் சத்துவாச்சாரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று (ஜன.8) மாலை சிமெண்டு மூட்டைகளை ஏற்றி சென்ற மினி வேன் சாலை நடுவே உள்ள தடுப்புக்கம்பியின் மீது மோதி விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது. இதனால் மினி வேனில் இருந்த சிமெண்டு மூட்டைகள் சாலையில் சிதறின. உடனே பின்னால் வந்து கொண்டிருந்த கார், கவிழ்ந்து கிடந்த மினி வேன் மீது மோதியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
Similar News
News January 22, 2026
வேலூர்: டிகிரி போதும், CBI-யில் வேலை! (CLICK)

வேலூர் மக்களே.. CBI-வங்கியில் 350 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதும், மாத சம்பளம் ரூ.44,480 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் உடனே <
News January 22, 2026
வேலூரில் 8 கிராம் தங்கம் இலவசம்!

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.
News January 22, 2026
வேலூர்: மரத்தில் தொங்கிய ஆண் சடலம்!

காட்பாடி அருகே கொடுக்கன் தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி லட்சுமணன் (64). குடும்பப் பிரச்சனையின் காரணமாகத் தினமும் மது அருந்தி வந்துள்ளார். இந்நிலையில் விரக்தியடைந்தவர் நேற்று ஜன.21 வீட்டின் அருகில் உள்ள முருங்கை மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சமத்துவம் குறித்து மேல்பாடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


