News November 14, 2025
வேலூர்: சடலத்தை ஆற்றில் தூக்கி செல்லும் அவலம்!

குடியாத்தம் மூங்கப்பட்டு ஊராட்சியில் வசிக்கும் கிராம மக்களுக்கு கவுண்டன்ய மகாநதி ஆற்றோரம் சுடுகாடு உள்ளது. மழையால் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் வெள்ளம் செல்வதால், சுடுகாட்டுக்கு செல்லும் பாதை ஆற்று தண்ணீரில் மூழ்கியது. அந்த கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவர் இறந்த நிலையில், நேற்று (நவ.13) மாலை அவருடைய உடலை அடக்கம் செய்ய ஆற்றோரத்தில் சேறும் சகதியும் நிறைந்த பாதையில் கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.
Similar News
News April 7, 2026
வேலூர்: 20 வயதில் திருமணம்; 14 வயது சிறுமி கர்ப்பம்!

கணியம்பாடியை சேர்ந்தவர் வெங்கடேசன் (20), இவர் கடந்த ஆண்டு 14 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றனர். சிறுமியை பரிசோதனை செய்ததில் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து டாக்டர் மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வெங்கடேசன் மீது போக்சோ வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News April 7, 2026
வேலூர் மாவட்ட காவல்துறை இரவு வந்து பணி விவரம்

வேலூர் மாவட்டத்தில் இன்று (ஏப் -06) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.