News December 4, 2024
வேலூர் கோர விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலி

வேலூர் மாவட்டம் கொணவட்டம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் தடுப்புச் சுவர் மீது மோதி சர்வீஸ் சாலையில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் மோதியது. இந்த விபத்தில் ஜீப்பில் பயணம் செய்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News September 18, 2025
வேலூரில் அரசு சேவைகளை பெற அலைய வேண்டாம்!

வேலூர் மாவட்டத்தில் இன்று (செப்.,18) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேலூர் மாநகராட்சி-சுசீ நாடர் திருமண மண்டபம், ஓட்டேரி, 2.குடியாத்தம் நகராட்சிக்கு செங்குந்தர் திருமண மண்டபம், காமாட்சியம்மன் பேட்டை. இங்கு அரசின் 13 துறைகளை சேர்ந்த 43 சேவைகளுக்கு கோரிக்கை மனுக்கள் வழங்கப்படுகிறன்றன. மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.
News September 18, 2025
அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் விழிப்புணர்வு கூட்டம்

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்தரவின் பேரில், இன்று வேலூர் தந்தை பெரியார் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் IUCAW, SJHR மற்றும் ACTU போலீசாரின் சார்பில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சமுதாயத்தில் அனைவரும் சமம் என்பது குறித்தும், வன்கொடுமைகள், குழந்தைத் திருமணம், போக்சோ சட்டம், மற்றும் காவல் உதவி செயலி ஆகியவை குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
News September 17, 2025
வேலூர் காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் காட்பாடி கே..வி.குப்பம், குடியாத்தம், பேரணாம்பட்டு, மேல்பட்டி, அணைக்கட்டு மற்றும் முக்கிய இடங்களில் பொது மக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன அதன்படி இன்று (செப்டம்பர்- 17) இரவு வந்த பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்கு செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.