News March 24, 2025
வேலூர் கோட்டையில் உள்ள நவசக்தி சத்யஜோதி

வேலூர் கோட்டைக்குள் அமைந்துள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில் சிற்பக்கலையின் அற்புதமாக திகழ்கிறது. இக்கோவில், 7 படிநிலைகளைக் கொண்ட பிரம்மாண்ட ராஜ கோபுரத்துடன் பக்தர்களை ஈர்க்கிறது. கோவியிலில் போர்க்காட்சிகள், வேட்டைக் காட்சிகள், போன்ற பல கதைகளை உயிர்ப்பிக்கும் விதமாக உள்ளது. ஆமை வடிவ மண்டபம், அழகிய தூண்கள், நந்தி சிலை, 1981 முதல் அணையாமல் எரியும் நவசக்தி சத்யஜோதி விளக்கு, கோவிலின் சிறப்பம்சங்கள் ஆகும்.
Similar News
News December 23, 2025
வேலூரில் மின்தடை – இதுல உங்க ஏரியா இருக்கா?

வேலூர் மாவட்டத்தில் இன்று (23.12.2025) மின்தடை ஏற்படும் பகுதிகள்: வேலூர், தோட்டப்பாளையம், செண்பாக்கம், எரியங்காடு, விரிஞ்சிபுரம், காட்பாடி சாலை, புதிய பேருந்து நிலையம், கஸ்பா, கோனாவட்டம், போகை, சேதுவளை, காந்தி சாலை, அதிகாரிகள் லைன், பழைய நகரம், வசந்தபுரம், சலவன்பேட்டை, செல்வபுரம், கஸ்பா, வேலூர் பஜார், சேதுவளை, விஞ்சிபுரம், எம்.வி. பாளையம், பொய்கை, பொய்கைமோட்டூர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
News December 23, 2025
வேலூர்: வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு!

பள்ளிகொண்டா, சின்னசேரி கிராமத்திற்கு செல்லும் சாலையில் விவசாய நிலத்தில் பேபி (72) என்பவர் சொந்தமாக வீடு கட்டி தனது மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று வீட்டில் மகன் இல்லாத நேரத்தில் மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து மூதாட்டியை தாக்கி விட்டு அவர் கழுத்தில் இருந்த 2 சவரன் தங்க நகையை பறித்து சென்றனர். மூதாட்டி கொடுத்த புகாரின் பேரில் பள்ளிகொண்டா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 23, 2025
வேலூர், வரும் 28-ம் தேதி இலவச கண் சிகிச்சை முகாம்

வேலூர் மாவட்ட வெல்லம் மண்டி வியாபாரிகள் சங்கம் மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து வரும் டிசம்பர் 28-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை காட்பாடி காந்தி நகரில் உள்ள ரங்காலயா திருமண மண்டபத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது. எனவே இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


