News February 14, 2026

வேலூர்: கொலை வழக்கில் அதிரடி கைது!

image

வேலூர் சத்துவாச்சாரி வ.உ.சி. நகரை சேர்ந்தவர் ராமு (வயது 43), கட்டிட மேஸ்திரி. கடந்த 11-ந் தேதி இரவு மர்ம நபர்கள் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த ஏ.சி.மெக்கானிக் சாலமன் (26) என்பவர் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை நேற்று (பிப்.13)போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News February 15, 2026

வேலூர்: SBI வங்கியில் வேலை வேண்டுமா..? APPLY NOW!

image

வேலூர் மாவட்ட பட்டதாரிகளே! SBI வங்கியில் ‘Circle Based Officer( CBO)’ பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஆன்லைன் தேர்வு, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதில் விண்ணப்பிக்க பிப்.25-ம் தேதி கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே கிளிக் பண்ணுங்க. SHARE பண்ணுங்க!

News February 15, 2026

வேலூர் கலெக்டர் அதிரடி உத்தரவு!

image

வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் பணியாற்றி வரும் 9 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (BDO) பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அதன்படி குடியாத்தம் BDO சத்திய மூர்த்தி வட்டார ஊராட்சிக்கும், வேலூர் BDO வின்சென்ட் ரமேஷ் பாபு குடியாத்தத்துக்கும், பேரணாம்பட்டு BDO சதீஷ்குமார் வேலூருக்கும் என மொத்தம் 9 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

News February 15, 2026

வேலூர்: தூக்கி வீசப்பட்ட முதியவர்!

image

பாகாயம் அருகே நேற்று (பிப்.14) மாலை 70 வயது முதியவர் சாலையை கடக்க முயன்ற்றுள்ளார். அப்போது எதிரே வந்த பஸ் மோதி சாலையில் தூக்கி வீசப்பட்டார். இவரை அப்பகுதி மக்கள் ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். மேலும் காயம் அடைந்த முதியவர் வைத்திருந்த ரூ.9,375-யை மருத்துவ உதவியாளர் அனிதா உறவினர்களிடம் ஒப்படைத்தார். இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்துள்ளன.

error: Content is protected !!