News December 6, 2025
வேலூர்: கூலி தொழிலாளிக்கு ரூ.13 கோடி GST!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த கார் ஓட்டுநர் மகாலிங்கத்தின் மனைவி யசோதா, தனியார் தொழிற்சாலையில் மாதம் ரூ.8000 சம்பளத்திற்கு வேலை செய்து வருகிறார். இவருக்கு ரூ.13 கோடி ஜிஎஸ்டி வரி பாக்கி உள்ளதால் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தனது வங்கி கணக்கில் இருந்து சம்பள தொகையை கூட எடுக்கமுடியாமல் தவித்து வருகிறார்.
Similar News
News March 9, 2026
வேலூரில் 126 கிலோ குட்கா பறிமுதல்

வேலூர் மாவட்டம் காட்பாடி உட்கோட்டம் மேல்பாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் (இன்று 09.03.2026) ஆந்திராவிலிருந்து தமிழகம் நோக்கி வந்த வாகனத்தில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 126 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.யு. சிவராமன் உத்தரவின்படி மேற்கொண்ட சோதனையில் 3 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
News March 9, 2026
வேலூர்: 250 கோழிகள் இலவசம்!

வேலூர் மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News March 9, 2026
வேலூர்: BE/B.tech முடித்தால் ரூ.48,000 சம்பளம்!

வேலூர் மாவட்ட பட்டதாரிகளே.., செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 275 சிறப்பு அலுவலர்கள் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு B.E/B.tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்க<


