News February 22, 2026
வேலூர்: குடும்பத் தகராறில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

வேலூர் மாவட்டம், பொன்னையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மோகனின் மனைவி செல்வி (49). தம்பதியிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறால், மனமுடைந்த செல்வி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் பலனளிக்கவில்லை. இச்சம்பவம் குறித்து பொன்னை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 25, 2026
வேலூர்: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

வேலூர் மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் ‘Fuel@Call’ என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 25, 2026
வேலூர்: ஃபீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

வேலூர் மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம், மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம். வேலூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் – 0416-2255599, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News February 25, 2026
வேலூர் மாவட்டத்தில் 82 மையங்கள் தயார்!

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு வரும் மார்ச் 2-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் வேலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 142 பள்ளிகளை சேர்ந்த 7,134 மாணவர்கள், 8,522 மாணவிகள் என மொத்தம் 15,656 பேர் எழுதுகிறார்கள். இதற்காக 82 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்வை மையங்களை கண்காணிக்க 82 முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


