News December 31, 2025

வேலூர் குடியிருப்பு பகுதியில் புகுந்த பாம்பால் பரபரப்பு!

image

வேலூர் மாவட்டம் வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே முத்து மண்டபம் டோபிகானா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் 4 அடி நீளம் உள்ள கண்ணாடி விரியன் பாம்பு இருப்பதாக இன்று (டிசம்பர் 31) பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பாம்பை பத்திரமாக பிடித்து சென்றனர். குடியிருப்பு பகுதியில் பாம்பு புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News

News December 31, 2025

வேலூர்: 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் கடனுதவி!

image

வேலூர் மக்களே! படித்த, படிக்காத நபர்கள் பலரும் வேலை தேடி வருகின்ற நிலையில், அவர்களுக்காகவே தமிழ்நாடு அரசு UYEGP என்ற பொன்னான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் 8ம் வகுப்பு படித்தவர்கள் கூட தொழில் தொடங்கலாம். அதற்காக, 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் கடனுதவி வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்பும் 45 வயதிற்குட்பட்டவர்கள் <>இங்கு<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News December 31, 2025

வேலூர் உள்பட 4 மாவட்டங்களில் ஆம்புலன்ஸ் நிறுத்தி வைப்பு

image

ஆங்கில புத்தாண்டு நள்ளிரவு 12 மணிக்கு பிறக்கிறது. இளைஞர்கள் பலர் மோட்டார் சைக்கிளில் சென்று புத்தாண்டை கொண்டாட உள்ளனர். எதிர்பாராத விதமாக நடக்கும் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகளுக்கு உடனடி சிகிச்சை அளிக்க மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் 30 முக்கிய இடங்களில் 108 ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News December 31, 2025

வேலூரில் 250 நாட்டுக் கோழிகள் இலவசம்!

image

வேலூரில் மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!