News July 5, 2025
வேலூர் காவல் துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம்,பேரணாம்பட்டு,கே வி.குப்பம்,அணைக்கட்டு மற்றும் திருவலம் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று ( ஜூலை 4) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது.இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
Similar News
News December 11, 2025
வேலூர் கலெக்டர் ஓர் முக்கிய அறிவிப்பு!

வேலூர் மக்களே, கிராம பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க, நடமாடும் (மொபைல்) பாஸ்போர்ட் சேவா என்ற வாகன வசதி தொடங்கப்பட்டுள்ளது. வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 17-ந் தேதி முதல் தொடர்ந்து 4 வாரங்களுக்கு மொபைல் பாஸ்போர்ட் சேவா வாகனம் நிறுத்தப்படும். இதன் கூடுதல் தகவலுக்கு வேலூர் கலெக்டர் அலுவலகத்தை அணுகலாம்.
News December 11, 2025
வேலூர்: சூதாட்டத்தில் ஈடுபட்ட பெண் கைது!

விரிஞ்சிபுரத்தில் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் விரிஞ்சிபுரம் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த சுகன்யா (27) என்பதும், தப்பியோடிய அவருடைய கணவர் சதீஷ் (32) என்றும் தெரிய வந்தது. இதையடுத்து சுகன்யாவை கைது செய்த போலீசார் மேலும் தப்பியோடிய சதீஷை தேடி வருகின்றனர்.
News December 11, 2025
வேலூர்: சிறையில் கைதி தற்கொலை முயற்சி!

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் கன்னியப்பன் (28) போக்சோ வழக்கில் கைதாகி 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று, கடந்த ஜூலை மாதம் முதல் வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில், நேற்று (டிச.10) சிறை வளாகத்தில் உள்ள கோழிப் பண்ணையில் வேலை செய்து வரும் இவர் அங்கு உள்ள புளிய மரத்தில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை சிறை காவலர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


