News May 7, 2025
வேலூர் காவல் துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (மே- 1) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
Similar News
News May 7, 2025
வேலூர் மாவட்டத்தில் நாளை கபாடி போட்டி தொடக்கம்

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட அளவிலான கபாடி போட்டிகளை நாளை மே 2-ம் தேதி காலை 10 மணியளவில் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தொடங்கி வைக்கிறார். என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News May 7, 2025
ரயிலில் சிக்கி ஒருவர் பலி

காட்பாடி பள்ளிக்குப்பத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (50). லாரி டிரைவரான இவர் நேற்று மாலை பள்ளிக்குப்பம் ரயில்வே தண்டவாளத்தை கடந்து சென்றார். அப்போது அந்த வழியாக காட்பாடி நோக்கி வந்து கொண்டிருந்த ரயில் இவர் மீது மோதியது. இதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே சிவக்குமார் உரியிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக காட்பாடி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News May 7, 2025
வேலூர் முக்கிய அதிகாரிகள் எண்கள்

SP- மதிவாணன்(8056654380)
ADSP – பாஸ்கரன்(9498168485)
ADSP – அண்ணாதுரை (9952598410)
ADSP – ஸ்ரீகாந்த் (9840388268)
DSP : வேலூர் – பிரித்திவிராஜ் (8508644070, 9498100356)
DSP : காட்பாடி – பழனி (9498105738 0416-2295455, 9498100357)
DSP : குடியாத்தம்- ராமச்சந்திரன் (9442184285, 04171-221288, 9498100360)
DSP : அணைக்கட்டு – திருநாவுக்கரசு (9498105161, 7094088123)