News December 18, 2025
வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன அதன்படி இன்று (டிச-17) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
Similar News
News December 18, 2025
வேலூர் மாவட்டத்தில் 4,726 பேர் எஸ்ஐ தேர்வு எழுத உள்ளனர்

சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பித்த, பொதுப்பிரிவினர் மற்றும் துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு, முதன்மை தேர்வு, தமிழ் தகுதித்தேர்வு வரும் டிச.21-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் 996 பெண்களும், 3,730 ஆண்களும் என மொத்தம் 4,726 தேர்வு எழுத உள்ளனர் என மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 18, 2025
வேலூர்: மைனர் பெண்ணை திருமணம் செய்த வாலிபர்!

பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் போயர் தெருவை சேர்ந்தவர் சிவா (28). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். பணி நிமித்தமாக ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதிக்கு சென்றபோது அங்கு 17 வயது மைனர் பெண்ணுடன் சிவாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனால் அவரை வெட்டுவானம் அழைத்து வந்து ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டுள்ளார். நேற்று தகவலறிந்த பள்ளிகொண்டா போலீசார் சிவா மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News December 18, 2025
வேலூர்: உங்கள் PAN Card-இல் இது கட்டாயம்!

வேலூர் மக்களே, நமது அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கு, நமக்கு PAN Card தேவைப்படுகிறது. இந்த நிலையில், மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் (CBDT) டிச.31 ஆம் தேதிக்குள் பான் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க அறிவுறுத்தியுள்ளது. இதற்காக நீங்கள் நேரடியாக எங்கும் அலைய வேண்டியதில்லை. இந்த லிங்க்கை <


