News January 9, 2026

வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே.வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி நேற்று (ஜன-08) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

Similar News

News February 11, 2026

வேலூரில் மகளிர்களுக்கான ராணுவ ஆட்சேர்ப்பு முகாம்

image

காட்பாடி பகுதியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இராணுவ வீரர்களுக்கான ஆட்சேர்ப்பு முகாம் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் மகளிர்களுக்கான ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் இன்று (பிப்.11) தொடங்கியது. இதை வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் ராணுவ அதிகாரி R.K.அவஸ்தி மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள், அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News February 11, 2026

வேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூட நெல் விலை நிலவரம்

image

வேலூர் டோல்கேட் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நெல் மூட்டைகளின் இன்றைய (பிப்.11) விலை நிலவரம் வெளியாகி உள்ளது. இதன்படி 75 கிலோ நெல் மூட்டைகள் ரூ.1,317 முதல் ரூ.2,269 வரையும், மகேந்திரா 606 ரகம் ரூ.1,277 முதல் 2,190 வரையிலும், நர்மதா ரூ.2,190 முதல் 2,196 வரையிலும், மணிலா (80 கிலோ) ரூ.9,289 முதல் 10,400 வரையிலும், கொப்பரை தேங்காய் 1 கிலோ ரூ.155 முதல் 181 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

News February 11, 2026

வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

image

வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமியின் மின் அஞ்சலுக்கு இன்று (பிப்.11) மீண்டும் 2-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து சத்துவாச்சாரி போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மாவட்ட ஆட்சியர் அறை மற்றும் அலுவலக வளாகம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர். இதனால் ஆட்சியர் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

error: Content is protected !!