News January 6, 2026
வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி நேற்று (ஜன.5) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.
Similar News
News January 23, 2026
வேலூர் மக்களே! EB பில் எகுறுதா..?

வேலூர் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <
News January 23, 2026
வேலூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

வேலூர் மாவட்டத்தில் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர் தம் வாரிசுகள் குறைகேட்பு நாள் கூட்டம் கலெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் இன்று (ஜன.23) மாலை 4 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள காயிதே மில்லத்” கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் சுதந்திரப்போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுதாரர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
News January 23, 2026
வேலூர் வேலைவாய்ப்பு முகாமில் 2786 பேர் தேர்வு!

வேலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் கடந்த ஆண்டில் நடத்தப்பட்ட 11 தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில் 401 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 6,211 பேர் பங்கேற்றனர். அவர்களில் 39 மாற்றுத்திறனாளிகள் உள்பட 2,786 பேர் தேர்வு செய்யப்பட்டு முன்னணி நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


