News September 6, 2025

வேலூர் காவலர் தினத்தை முன்னிட்டு எஸ்பி தகவல்

image

காவலர் தினத்தை முன்னிட்டு நாளை (செப்டம்பர் 06) வேலூர் காவலர் கவாத்து மைதானத்தில் காவல் அதிகாரிகளின் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகளும், தொடர்ந்து காலை 10 மணியளவில் காவலர் திருமண மண்டபத்தில் வேலூர் மாவட்ட காவல்துறை மற்றும் சிஎம்சி மருத்துவமனை இணைந்து நடத்தும் ரத்ததான முகாமும் மாலை 5 மணியளவில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது என எஸ்பி மயில்வாகனன் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 4, 2026

வேலூரில் தடை; அறிவித்தார் ஆட்சியர்!

image

இந்திய தேர்தல் ஆணையம், ஏப்ரல் 9-ம் தேதி காலை 7 மணியிலிருந்து 29-ம் தேதி மாலை 6.30 மணி வரை, வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்துவது மற்றும் அதனை அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவது அல்லது வேறு ஏதேனும் முறையில் பரப்புவது ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது என வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

News April 3, 2026

வேலூரில் பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

வேலூர் மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை<> இந்த லிங்கில் <<>>மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

News April 3, 2026

விழிப்புணர்வு ரங்கோலி கோலங்களை பார்வையிட்ட கலெக்டர்

image

வேலூர் தொகுதிக்குட்பட்ட கிரீன் சர்க்கிள் பகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அங்கன்வாடி பணியாளர்கள் வரைந்த ரங்கோலி கோலங்களை கலெக்டர் சுப்புலட்சுமி பார்வையிட்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன், வேலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமார், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

error: Content is protected !!