News January 23, 2026
வேலூர்: கவலை தீர்க்கும் கருணைக்கடல்…!

வேலூர் அனந்தலை மதுர காளியம்மன் அன்னை,வேண்டுவோருக்கு வேண்டியதை அருளும் சக்தி வாய்ந்த தெய்வமாகத் திகழ்கிறாள். இக்கோஇலில் செவ்வாய் & வெள்ளிக்கிழமைகளில் ராகு கால பூஜைகள் வெகு விசேஷமாக நடைபெரும். திருமணத் தடை நீங்கவும், குடும்ப நலன் வேண்டியும் பக்தர்கள் மாவிளக்கு ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். சாந்த சொரூபியாகக் காட்சியளிக்கும் அம்மனின் சன்னதி, பக்தர்களுக்கு மிகுந்த மன அமைதியை வழங்குகிறது. ஷேர்!
Similar News
News February 4, 2026
வேலூரில் இந்த பகுதிகளுக்கு மின் தடை!

வேலூரில் உள்ள திருவலம், கர்ணாம்பட்டு, சத்துவாச்சாரி, வடுகந்தாங்கல் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (பிப்.5) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின் வாரியம் அறிவித்து உள்ளது. எனவே பொது மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்த படுகின்றனர்.
News February 4, 2026
வேலூரில் மின் தடை; உங்க ஏரியா இருக்கா?

வேலூரில் தொரப்பாடி, வடுகந்தாங்கல், சத்துவாச்சாரி, கார்ணாம்பட்டு துணைமின் நிலையங்களில் நாளை (பிப்.5) மின் தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி காலை 9 மணி முதல் 5 மணி வரை சித்தேரி, தென்றல் நகர், இடையன்சாத்து, அரியூர், தொரப்பாடி சிறை குடியிருப்பு, எழில் நகர், டோல்கேட், அண்ணாநகர், சங்கரன்பாளையம், சாய்நாதபுரம், குப்பம், விருப்பாட்சிபுரம், ஓட்டேரி, பாகாயம் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் தடை ஏற்படும்.
News February 4, 2026
வேலூரில் நள்ளிரவில் பயங்கரம்!

குடியாத்தத்தில் இருந்து மினிவேன் ஒன்று நேற்று இரவு (பிப்.3) ராணிப்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது அப்துல்லாபுரம் அருகே சாலையை பெண் ஒருவர் கடக்க முயன்றார். இதை பார்த்த டிரைவர் பிரேக் போட்டார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த மினிவேன் சென்டர் மீடியனில் மோதி தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்தது. இதில் அப்பெண் சிறு காயங்களுடன் தப்பினார். பின்னர் வேன் கிரேன் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது.


