News April 15, 2025
வேலூர் கள்ள சந்தையில் மது விற்பனை ஒருவர் கைது

வேலூர் லாங்கு பஜாரில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்வதாக வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ஒரு துணிக்கடையில் அருகே பதுக்கி வைத்து மது விற்பனை செய்து கொண்டி ருந்த வேலூர் கொசப்பேட்டை பகுதியை சேர்ந்த வினோத்குமாரை (36) போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
Similar News
News January 27, 2026
வேலூர்: பாட்டியிடம் தங்கத்தை உருவிய கில்லாடி!

காட்பாடியை சேர்ந்தவர் ராஜம்மாள் (64). இவரிடம் அரசு ஓய்வு ஊதியத்தை அதிகப்படுத்தி தருகிறேன் என கூறி போட்டோ எடுக்க ஸ்டுடியோவுக்கு மர்ம நபர் ஒருவர் அழைத்து சென்றுள்ளார். பின்னர் மூதாட்டி காதில் அணிந்திருந்த கம்மல் உள்ளிட்ட 6 கிராம் தங்க நகையை கழட்டுமாறு கூறிவிட்டு நகை பையை எடுத்துக் கொண்டு தப்பி சென்றார். இதையடுத்து போலீசார் திருட்டில் ஈடுபட்ட தேவமகேஷை (43) கைது செய்தனர்.
News January 27, 2026
வேலூரில் வாலிபர் துடிதுடித்து பலி!

கே.வி குப்பம் அடுத்த கீழ் விளாச்சூர் பகுதியில் சேர்ந்தவர் செந்தில்குமார் (36). இவர் நேற்று (ஜன.26) பைக்கில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த ஆட்டோ மோதியதில் பலத்த காயமடைந்தார். வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது குறித்து கே.வி.குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவர் ஹேமந்த் குமாரை கைது செய்தனர்.
News January 27, 2026
வேலூர்: குளிரால் ஏற்படும் முகவாதம் -உஷார்!

வேலூர் உட்பட தமிழகம் முழுவதும் இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. குளிர்ந்த தரையில் படுத்து உறங்கினால் முகவாதம் நோய் வருவதற்கான சாத்திய கூறுகள் அதிகம் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. முகம் ஒரு பக்கம் தொங்குதல், சிரிக்க முடியாமை, கண் மூடுவதில் சிரமம், கண் வறட்சி அல்லது நீர் வடிதல், சுவை மாற்றம், காதுக்கு பின்னால் வலி இருந்தால் உடனே டாக்டரை அணுகுங்கள். உடனே SHARE பண்ணுங்க.


