News September 26, 2025
வேலூர் கல்லூரி விழாவில் அபுதாமி அமைச்சர்

காட்பாடியில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தில் கிராவிடாஸ் 2025 எனும் மூன்று நாள் அறிவுசார் விழா இன்று தொடங்கியது. இதில் இதில் அபுதாபி நாட்டின் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் மஜித் அலி அல் மன்சூரி கலந்துகொண்டு பேசுகையில் செயற்கை நுண்ணறிவு, உயிரி தொழில்நுட்பம், விண்வெளி ஆய்வு, பருவநிலை மாற்றம் ஆகிய சவால்களுக்கு மாணவர்கள் தீர்வு அளிக்க வேண்டும் என்றார்.
Similar News
News January 9, 2026
வேலூர்: கலெக்டர் கையெழுத்து COPY; கடைசியில் TWIST!

வேலூர் ஆர்.என்.பாளையத்தை சேர்ந்த ஷாஜகான், சதுப்பேரியில் உள்ள தனது 1 ஏக்கர் 30 சென்ட் நிலத்தை வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்ய முடிவு செய்தார். இதற்காக தமிழ் செலவம் என்பவர் மூலமாக வேலூர் கலெக்டர் அலுவலகத்திலிருந்து தடையில்லா சான்று பெற்றுத் தருமாறு கமிஷன் கொடுத்துள்ளார். இதையடுத்து கலெக்டரின் கையெழுத்தை போலியாக தயார் செய்த தியாகராஜன் மற்றும் தமிழ் செலவம் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
News January 9, 2026
வேலூர்: பெண்களிடம் பேசியதால் கொடூர கொலை!

வேலூர் தனியார் கல்லூரியில் படித்து வந்த டேனி வளனரசு (19), கடந்த 2-ம் தேதி ஆந்திர மாநில எல்லையில் உள்ள கிராமத்தின் மலையடி வாரத்தில் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து பாகாயம் போலீசார் கிஷோர் கண்ணன் மற்றும் பார்த்தசாரதி ஆகிய 2 பேரை கைது செய்தனர். விசாரணையில் மாணவிகளுடன் பழகுவதை கைவிடும்படி நண்பர்கள் கண்டித்தும் டேனி கேட்காததால் ஆத்திரத்தில் தீர்த்து காட்டியது தெரிய வந்தது.
News January 9, 2026
வேலூர்: தங்கையை கத்தியால் வெட்டிய அண்ணன்!

பிச்சனூரை சேர்ந்த லாரி டிரைவர் திலீப்குமார், மனைவி சத்யா (24). இவரின் அண்ணன் சத்தியமூர்த்தி (28). இவர்களின் தாயாருக்கு அரசு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தாயரை சந்திக்க சென்ற சத்யா வீட்டில் பாகம் கேட்க செல்கிறார் என நினைத்த சத்தியமூர்த்தி நேற்று முன்தினம் (டிச.7) சத்யாவை கத்தியால் தலையில் சரமாரியாக வெட்டினார். இதையடுத்து குடியாத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து சத்திய மூர்த்தியை கைது செய்தனர்.


