News August 6, 2025
வேலூர் கலெக்டர் தலைமையில் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி

வேலூர் மாவட்டம் அண்ணா சாலையில் உள்ள ஊரீசு கல்லூரியின் டிபோர் வளாகத்தில் நாளை காலை 9:30 மணியளவில் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு கண்ட புதுமைப் பெண்கள் என்ற தலைப்பில் வழக்கறிஞர் அருள்மொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேச உள்ளார் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 6, 2025
வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி முக்கிய அறிவிப்பு

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ரேஷன் கார்டு சிறப்பு திருத்த முகாம் நடைபெற உள்ளது. இதில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் மேற்கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார். *இது போன்ற முகாமில் அளிக்கும் மனுக்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கும். ரேசன் அட்டை தாரர்களுக்கு பகிரவும்*
News August 6, 2025
வேலூரில் VAO மீது புகார் அளிப்பது எப்படி?

குடிமக்கள் கோரும் சான்றிதழ்களை தராமல் இழுத்தடித்தாலோ, சம்மந்தப்பட்ட கிராமத்தில் VAO வசிக்காவிட்டாலோ VAO மீது வேலூர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் (0416-2253502) நேரடியாக புகார் அளிக்கலாம். அளிக்கப்படும் புகார்களுக்கு 3 – 7 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். VAO மீது கொடுக்கப்படும் புகார் உறுதி செய்யப்பட்டால், உடனடியாக அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, வேறொரு VAO நியமிக்கப்படுவார். ஷேர்!
News August 6, 2025
வேலூர்: டிகிரி முடித்திருந்தால் போதும்! கை நிறைய சம்பளம்

மத்திய அரசின் காப்பீடு நிறுவனத்தில் உதவியாளருக்கான 500 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு மட்டும் 37 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு 21 – 30 க்குள் இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாதம் ரூ.22,405 – 62,265 சம்பளம் வரை வழங்கப்படும். விருப்பமுடையவர்கள் வரும் ஆகஸ்ட் 17க்குள் இந்த <