News August 6, 2025
வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி முக்கிய அறிவிப்பு

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ரேஷன் கார்டு சிறப்பு திருத்த முகாம் நடைபெற உள்ளது. இதில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் மேற்கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார். *இது போன்ற முகாமில் அளிக்கும் மனுக்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கும். ரேசன் அட்டை தாரர்களுக்கு பகிரவும்*
Similar News
News August 7, 2025
வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாரத்தான் போட்டி

வேலூர் மாவட்ட காவல்துறை சார்பாக “DRUG FREE TN” என போதை பொருட்கள் ஒழிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், வரும் ஆகஸ்ட் 9 காலை 5:30 மணியளவில் காட்பாடி சித்தூர் பஸ் நிறுத்தத்தில் தொடங்கி நேதாஜி ஸ்டேடியம் வரை மாரத்தான் போட்டி நடைபெறுகிறது. இதில் 15 வயது முதல் 30 வயது வரை ஆண்/பெண், 30 வயதிற்கு மேற்பட்டவருக்கான ஆண்/பெண் என 2 பிரிவுகளில் நடைபெற உள்ளது என எஸ்பி மயில்வாகனன் தெரிவித்துள்ளார்.
News August 7, 2025
வேலூர் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் தென்இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று வட தமிழகத்தில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூரில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கையாக இருங்கள். அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்
News August 6, 2025
வேலூர்: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்

வேலூர் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 7 இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் 7 நான்கு சக்கர வாகனங்கள் உடைக்க தகுதியுள்ள நிலையில் (scrab) நாளை ஆகஸ்ட் 7-ம் தேதி காலை 9 மணிக்கு வேலூரில் உள்ள நேதாஜி விளையாட்டு மைதானத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது. இதில் பங்கேற்க ரூ.100 கட்டணம் செலுத்தி ஏலத்தில் பங்கேற்கலாம் என வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தெரிவித்துள்ளார்.